fbpx

காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, மாணவி எரிந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே …

மதுவை நெகிழி பாட்டிலில் விற்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக நெகிழி பாட்டில்களில் விற்க 1996ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து மது விற்பனை செய்யப்பட்டால் தீங்கு …

அதிமுகவின் முதல் எம்பி-யான மாயத்தேவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 15ஆம் தேதி அக்டோபர் 1935 ஆண்டு பிறந்தவர் மாயத்தேவர். இவர் பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை …

உலகின் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.. அந்த வகையில் தற்போது 3 புதிய அம்சங்களைச் சேர்ப்பதாக WhatsApp அறிவித்துள்ளது. பயன்பாடு இப்போது ஒரு குழுவிலிருந்து அமைதியாக வெளியேற உங்களை அனுமதிக்கும், இது ஒரு பயனுள்ள அம்சமாகும், மேலும் நீங்கள் ஒரு பகுதியாக …

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சி.இ.ஓ. …

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியாற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் …

ஒலிம்பியாட் நிறைவு நாளன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 44ஆவது உலக சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 09.08.2022 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், …

கத்திப்பாரா மேம்பாலம் அருகே வழிகாட்டிப் பலகை விழுந்து இருவர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கத்திப்பாரா மேம்பாலம் அருகே சாலையில் பயணிப்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் மிகப்பெரிய வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டிப்பலகை இரு புறமுமிருந்த கம்பங்களோடு திடீரென பெயர்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரும் …

தமிழகத்தில் இன்று 33-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 4ஆம் அலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்பட …

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer (Fire-safety), Manager (Security) பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் B.Tech, Post …