fbpx

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையைவிட்டு தப்பியோடி உள்ளார்..

வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை சிக்கித் தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால் எரிபொருள், உணவுப் …

வீட்டை விட்டு ஓடிவர மறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது 19 வயது மகள் அபர்ணா. சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த அபர்ணாவை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு …

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது குறித்து உயர்நீதிமன்ற கிளையில் சிபிஐ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சில …

இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்த செய்தியில், ”இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி, அவர் இலக்கை மடைமாற்றி திசை …

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 54 கல்குவாரிகளில் விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 55 குவாரிகளையும் முழுமையாக ஆய்வு செய்து விதிமீறல்களை கண்டறியுமாறு ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குவாரிகளை …

திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால், இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை …

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரும் பணக்காரராக உள்ளார். இவர், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். ட்விட்டர் நிர்வாகம் மற்றும் எலான் …

ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 …

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பிரியா ஆனந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா. ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள், இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். …

கல்வி மற்றும் தொழில் கடன் பெற, சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி …