fbpx

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் …

ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாத்துரையின் நிறுவன …

அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி, திமுகவின் கைக்கூலியாக கே.பி.முனுசாமி செயல்படுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், …

இலங்கையை போல் இந்தியாவிலும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கலாம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் 2 கோடி …

தி காட்பாதர் பட நடிகர் ஜேம்ஸ் கேன் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 82..

ஹாலிவுட்டில் 1960களில் ஜேம்ஸ் கேன் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.. பில்லி வைல்டர் ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் கொப்போலா உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் அவர் நடித்து வந்தார்.. ஆனால், ஹாலிவுட்டின் தி காட்பாதர் (The Godfather) …

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு சென்னையில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் …

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சோயாபீன் மற்றும் அரிசி தவிடு எண்ணெய் விலையை லிட்டருக்கு 14 ரூபாய் வரை குறைத்துள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறிப்பின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் லிட்டருக்கு ரூ.180-க்கு கிடைக்கும், தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.194 ஆக உள்ளது. உலகளாவிய சமையல் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை …

ஓட்டுநர் உரிமம் வாங்காத நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி  RTO அலுவலகத்திற்கு சென்று கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தத் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெறலாம்.

இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்..! எச்சரிக்கும் காவல்துறை..! பெற்றோர்களே உஷார்

மத்திய சாலைப் போக்குவரத்து …

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 223 நபர்களிடமிருந்து ரூ.1,16,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது …

உரம் பதுக்கப்படுவதைக் கண்டறிய மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜுன் மாதத்திற்கான உரத் தேவையான 27,340 மெட்ரிக் டன் யூரியா, 10,010 மெட்ரிக் டன் டிஏபி 6,160 மெட்ரிக் டன் …