fbpx

பிரபல WWE வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மல்யுத்த விளையாட்டு போட்டியான WWE மூலம் பிரபலமானவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காளி. ‘தி கிரேட் காளி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், பஞ்சாபில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றை காரில் கடக்க முயன்ற போது, அங்கிருந்த …

விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப ஒருநாள் தொடர் வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்.16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இந்திய அணி பல்வேறு வீரர்களை டி20 உலகக் கோப்பைக்காக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில், அண்மை …

நான் இருக்கும் வரை வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது என்று சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.

அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்த விழாவில் சசிகலா பேசியதாவது, ”எம்.ஜி.ஆர். அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது. எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வழிநடத்தினேன். நம் அனைவரின் எண்ணமும் …

நித்யானந்தா சீடர் ஒருவர் முருகன் கோயிலை கட்டி, அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பெரம்பை கிராமத்தில், பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோயில்போல இங்கு ஒரு முருகன் கோயிலை கட்டிவந்தார். 27 அடி உயரத்தில் முருகன் சிலை …

ரேஷன் கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, …

அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் …

தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள …

ரவீந்திரநாத் எம்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “திமுக ஒரு தீயசக்தி… அதை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். அந்த திமுக-வை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் …

சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது,

சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் …

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …