Warning: unlink(/tmp/wordpress-seo.22.4.zip): No such file or directory in /home/u857151793/domains/1newsnation.com/public_html/wp-admin/includes/class-wp-upgrader.php on line 385
1NewsNation: Latest Tamil News, Politics, Kollywood, Sports.

அமெரிக்காவில், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவர் தனது 30 வருட நினைவாற்றலை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் கிம் டெனிகோலா. கடுமையான தலைவலியை அனுபவித்து வந்த இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு, அவர் தனது கடந்த 30 வருட நினைவை இழந்தார். தற்போது 60 வயதாகும் கிம், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து எழுந்த […]

பாக்டீரியாக்கள் வளர தொப்பு ஒரு பொதுவான இடமாகும். பலர் தொப்புளை சுத்தம் செய்வதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொப்புளை சுத்தம் செய்ய, மென்மையான சோப்பு, பருத்தி அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். உள்ளேயும் வெளியேயும் மெதுவாக ஸ்க்ரப் செய்த பின், அதை நன்கு துடைக்க மறக்காதீர்கள். வியர்வை, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் காதுகளுக்குப் பின்னால் உள்ள தோலில் குவியும். இதனால் அப்பகுதி அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. […]

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்காக பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களின் கீழ் தாசில்தார்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்லாபாத், பால்குளம், திருக்கோளூர், உடையார்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அம்பதி ராயுடு ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 2013 – 2019 வரை விளையாடியவர் அம்பதி ராயுடு. இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010 – 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு, […]

கடந்த 2013ஆம் ஆண்டு 7-வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016இல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8-வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தவாறே இருந்தது. ஆனால், சமீபத்தில் […]

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, லோகேஷ் கனகராஜ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விஷால், விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அஞ்சலி செலுத்தாது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தன்னலமற்ற ஹீரோவாக ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா மட்டுமின்றி, அரசியல், பொது வாழ்விலும் நிஜமான ஹீரோவாக மாஸ் காட்டினார். தன்னுடன் […]

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் அரசுத்துறை அலுவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 30) முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா, […]

இங்கிலாந்தின் நார்த் யார்க்ஷயரின் ஸ்கார்பரோவைச் சேர்ந்தவர் கிர்ஸ்டி போர்டோஃப்ட். 3 குழந்தைகளின் தாயான இவர், சமீபத்தில் தனது பாட்னர் ஸ்டூவுடன் வீட்டில் டின்னருக்கு பிளான் போட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்திற்குப் பிறகு, அவர் சோபாவில் உயிரற்ற உடலாகக் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்டனர். மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்த போதிலும் அவரை முதலில் காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் முயன்ற நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் […]

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் […]

கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். கோயம்பேட்டிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆனால், […]