அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை மேலும் புதிய நிர்வாகிகளின் நியமனத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் . இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் […]

இந்தியாவில் பாராளுமன்றங்களுக்கான பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து பாராளுமன்றங்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் […]

இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” என வந்தவாசியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்றுமாலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வலிமைக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக மீண்டும் பிரதமாக வர […]

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். இதனை […]

மத்திய பிரதேச மாநில பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தர் நகரில் மிகப்பெரிய பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சற்று முன் அந்த ஆலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயங்கர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் […]

உத்தரப்பிரதேச மாவட்டத்தில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆபாச படங்களுக்கு அடிமையான, 19 வயது இளைஞர் ஒருவர், தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரை கொலை செய்துள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில், சஞ்சு குமார் (19) என்ற இளைஞர் தனது தாய் மற்றும் தங்கையோடு வசித்து வருகிறார். சஞ்சு குமாரின் தந்தை […]

சைவ பிரியர்களின் விருப்ப உணவான கோபி மஞ்சூரியன் கோவாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப விருப்ப உணவுகள் இருக்கும். ஒரு மாநிலத்தில் கிடைக்கும் உணவுகள் வேறு மாநிலத்தில் கிடைக்காது. அப்படி இருந்தாலும் சுவையில் மாறுபடும். அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் மஞ்சூரியன் எந்த அளவு பிடிக்குமோ, சைவ பிரியர்களுக்கு அதே அளவு கோபி மஞ்சூரியன் உணவு பிடிக்கும். காலி பிளவரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கோபி மஞ்சூரியன் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவரும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தினர். இதில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஆட்சியர் ஶ்ரீதர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, […]

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது . கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சியைச் சார்ந்த முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார் இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து விலகி […]