கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜனவரி 5) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அலைகள் […]

”தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (Hans, Cool Lip) விற்பனை செய்யும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும்” என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவ முறைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரையாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்தால் […]

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று வழக்குகளை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சத்தமாக தனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார். இதனை கவனித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அதிர்ச்சி அடைந்து அந்த வழக்கறிஞரை கண்டித்தார். வழக்கறிஞர் குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”ஒரு நிமிடம்.. உங்கள் குரலை சற்று குறைத்துப் பேசுங்கள். இந்த நீதிமன்றத்தில் மரியாதையுடன் பேசுங்கள்” என்றார். […]

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, இன்று (ஜனவரி 4) காலை அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அனுப்பிய 3-வது சம்மனை கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டதை அடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சட்டத்துறை […]

2024 பிறந்து சில மணி நேரத்தில் நாஸ்டர்டாமஸின் கணிப்புகளில் ஒன்றான அந்த கோர சம்பவம் பலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவஞானியான நாஸ்டர்டாமஸ், ஜேர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 2019ல் கோவிட் தொற்றுநோய் தொடர்பிலும் துல்லியமாக கணித்த பெருமைக்குரியவர். தற்போது புத்தாண்டில் ஜப்பான் நாட்டை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தொடர்பிலும் அவர் கணிப்பு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் […]

தமிழ்நாட்டில் உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிறகு 2020ஆம் ஆண்டை முற்றிலுமாக கொரோனா வைரஸ் முடக்கிப்போட்டது. கொரோனா வைரஸ் உருமாறி மக்களை தாக்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட […]

ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு காரணமாக உடல் சிதறி பலியானோர் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அச்சத்தையும் சோகத்தையம் ஏற்படுத்தியுள்ளது. ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமாணி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இந்த படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அவரது உடல் டெஹ்ரானின் தெற்கு நகரான கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் […]

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 73 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 7.5 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இஷிகாவாவின் மத்திய மாகாணத்தில் உள்ள நோட்டோ தீபகற்பத்தை உலுக்கியது, இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் கிழக்கு ரஷ்யாவிற்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் நோட்டோ தீபகற்பத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இஷிகாவா மாகாணத்தில் அதிக […]

முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.1,000 கிடைக்காதவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த நிலையில், தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே பணம் வரவு வைக்கப்படும் […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை போலவே தோற்றமளிக்கும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டு பிறந்தது முதலே ஆங்காங்கே சோக சம்பவங்கள் நடந்துவருகிறது. அதாவது, தத்துவ ஞானிகளின் கணிப்புகள் பலித்துவருவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். அந்தவகையில், கணிப்புகளில் ஒன்றாக கருதப்படும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கொல்லப்படுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த […]