பீகாரில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பீகார் கல்வித் துறை கடந்த 6 மாதங்களில் பணிக்கு வராத 12,987 அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 39 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அதே சமயம் 13 கல்வியாளர்கள் முன் அனுமதியின்றி ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் […]

தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET 2024-2025-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி […]

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி; உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்து பேசினோம். 21 மசோதாக்கள் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் […]

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அபராமின்றி மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜனவரி 2 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி […]

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் […]

காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழில் கடனுக்காக ரூ.1,000 கோடியில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-ம்தேதி பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதற்கானஅரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள், […]

சென்னையைச் சேர்ந்த மூதாட்டியை ஏமாற்றி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சென்னை வியாசர்பாடி அடுத்துள்ள சாமியார் தோட்டம் 1-வது தெருவில் வசித்து வருபவர் இன்பச் செல்வி(53). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் […]

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி கரசைவ அவர்களால் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச […]