இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக தனது மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அஜித் அகர்கர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதியன்று பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் அக்டோபர் 4-ம் தேதிக்கு பின்னரே, புதிய தலைமைத் தேர்வாளர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கவுகாத்தியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த […]
ஓமன் நாட்டு கடற்பகுதியில், இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ‘எம்.வி கேப் டாவ்’ (MV Cape Dao) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் மாலுமி உயிரிழந்துள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. “இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று இந்திய தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தக் […]
வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் கோடாரியுடன் வந்த நபர், அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை விரட்டியதுடன், ஒரு நாயை பிடித்து தாக்கிக் கொன்றுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களும் அவரது ஆவேசத்துக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் நரேந்திர அகிர்வார் தனது […]
“உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது… உடனடியாக KYC Update செய்யுங்கள்” என்ற மெசேஜ் செல்போனுக்கு வந்தால், அதை சாதாரண வங்கி அறிவிப்பாக நினைத்து உடனே செயல்பட வேண்டாம். KYC புதுப்பிப்பு என்ற பெயரில் மோசடிக்காரர்கள் அனுப்பும் போலி Link அல்லது APK File-ஐ பயன்படுத்தினால், உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் சிக்கலாம். டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து புதிய வடிவங்களை எடுத்து வரும் நிலையில், தற்போது KYC […]
மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமா என்ற சந்தேகமும் கேள்விகளும் பல பெண்களுக்கு எழக்கூடும். “போதுமான அளவு பால் சுரக்குமா?”, “தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா?”, “புற்றுநோய் மீண்டும் வருமா?”, “ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்டால் என்ன செய்வது?” போன்ற பல்வேறு பயங்கள் அவர்களிடம் இருக்கும். ஆனால், மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்குப் பிறகும் தாய்ப்பால் கொடுப்பது முற்றிலும் சாத்தியமே என்று மருத்துவ நிபுணர்கள் […]
சிறப்பு தீவிர திருத்த முறைமை (SIR) மற்றும் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இணைந்து “வாக்குத் திருட்டில்” ஈடுபட்டுள்ளதாகச் சாடியுள்ள ராகுல் காந்தி, இது இந்திய […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடக்குமுறைகளுக்கு நடுவே ஆண் வேடமிட்டு சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்த ஆப்கான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி (Fariba Hashimi), ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் நகோயா நகருக்கு அருகில் நடைபெற்ற மகளிர்க்கான சாலை சைக்கிள் பந்தயத்தில் (Women’s Road Race), இத்தாலியில் வசித்து வரும் 23 வயதான ஃபரிபா ஹாஷிமி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் […]
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது […]
சிறப்பு தீவிர திருத்த முறைமை (Special Intensive Revision – SIR) தொடர்பான முடிவுகளில் தேர்தல் ஆணையத்திற்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான ஊடக செய்திகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் மறுத்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் மூன்று ஆணையர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடன் தான் SIR உள்ளிட்ட இந்திய தேர்தல் […]
50 ஆண்டுகளாக இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட இளையராஜாவின் பெயர் தற்போது ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ அஞ்சல் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளது. அவரது இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், புகைப்படம் இடம்பெற்ற சிறப்பு நினைவு அஞ்சல் தலைகள் மெல்போர்னில் வெளியிடப்பட்டுள்ளன. செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு, விக்டோரியா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. Australia Post வெளியிட்ட வரையறுக்கப்பட்ட பதிப்பு அஞ்சல் தலைகளை விக்டோரியா மாநில நிதியமைச்சர் Enver Erdogan MP அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, […]

