2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா […]
பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முதன்மை குற்றவாளி நந்தன் யாதவை, காவல்துறையினர் என்கவுண்டர் செய்து பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 19 அன்று மாலை நடைபெற்றது. ஒரே பயிற்சி வகுப்பில் படிக்கும் நண்பர்களான சிறுவனும் சிறுமியும் வீட்டிற்குத் திரும்பும்போது, புகைப்படம் எடுப்பதற்காக வழியில் ஒரு இடத்தில் நின்றுள்ளனர். […]
தெலங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை அதிர்ச்சிகரமான திருப்பத்தை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், சிசிடிவி காட்சிகள், செல்போன் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கோதாவரிகனியில் உள்ள நஸ்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்த விரிவுரையாளராக பணியாற்றி வந்த நவீன் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது. மாணவி […]
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வி.எஸ். பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய […]
1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா, ராதா. நடிப்புடன் இணைந்து இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் ஏஆர்எஸ் கார்டன் என்ற படப்பிடிப்பு தளத்தையும் நடத்தி வந்தனர். இந்த வளாகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது பெயரில் இருந்த […]
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “இன்னும் 4 மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக பேசியுள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள இந்த இரு தொகுதிகளின் தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அக்ரி […]
இன்றைய தலைமுறையில் காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் சில முடிவுகள், குடும்ப உறவுகளையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாகியுள்ளது. திருமணமான 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தை நாடியுள்ளனர். மைன்புரியைச் […]
வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக நீடித்த இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கிய தகவல்கள் வெளிவந்து வருகின்றன. சிறுமியின் அடையாளத்தை கண்டறிந்தது முதல் வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பணப்பரிவர்த்தனை வரை பல்வேறு அம்சங்களை போலீசார் தற்போது விசாரணைக்குள் கொண்டு வந்துள்ளனர். வீரமணி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், ஆரம்பகட்ட விசாரணை எவ்வாறு […]
ஐஐடி பாம்பேவில் 20 வயது பி.டெக் மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் நான்காவது நாளை எட்டிய நிலையில், சம்பவம் தொடர்பான முந்தைய அறிக்கைக்காக ஐஐடி பாம்பே நிர்வாகமும் மன்னிப்பு கோரியுள்ளது. ஐஐடி பாம்பே இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே, திங்கள்கிழமை மதியம் மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பேராசிரியர் சூர்யநாராயணா […]
லக்னோவில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 25 வயது இளைஞர் ஓட்டப்பந்தயத்தின்போது உயிரிழந்த சம்பவம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது தொண்டையில் 250 மில்லி அளவிலான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் சிக்கியிருந்ததும், அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்துக்குக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி லக்னோவில் உள்ள 35வது பட்டாலியன் பிஏசி மைதானத்தில் ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வு […]

