புதிய தொழிலாளர் சட்டங்கள் பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் உள்ள பீடி மற்றும் சிகரெட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கவும், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வகை செய்கிறது. […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவரும் […]

குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஓராண்டு காலத்தை குறிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். […]

அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையைக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது […]

கார்த்திகை மாதம் ஆன்மீக சிறப்புமிக்க மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறும் சிவ வழிபாடு சிறப்புக்குரியதாகும். கார்த்திகை மாதம் விரதம் அனுஷ்டிப்பதால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். அவற்றில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு மற்றும் கடைபிடிக்கப்படும் விரதம் மிக முக்கியமானதாகும். கார்த்திகை ஞாயிறு விரதம் என்பது கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு, தொடர்ந்து 12 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். நவகிரகங்கள் இந்த விரதத்தை […]

இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் எதற்கு இத்தனைப் பாகுபாடுகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே..? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2,000 கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்ச மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்குவதற்கான […]

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றச் சம்பவங்களில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், […]

பயிர் பாதிப்பை கணக்கெடுத்து டிசம்பர் இறுதிக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மழை காரணமாக தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மேலும், அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பயிர் சேத நிலைகளுக்கு ஏற்ப உரிய […]