2026 பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. 2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கு நாளை கடைசி நாள். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக […]

திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

தமிழ் கடவுளான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மனதார வழிபாடு செய்தால், நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமானின் முழு அருளும் கிடைக்க ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இந்தப் பதிவில் பார்க்கலாம். முருகப்பெருமானிடம் பலரும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவார்கள். அது நிறைவேறிவிட்டால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். ஆனால், சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் இருக்கும். அவர்கள், அந்த […]

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத. தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் […]

இந்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறை இரு நாடுகளும் தங்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, ஆனால் பாகிஸ்தானில் சுதந்திர தினம் ‘யாம்-இ-ஆசாதி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக சுதந்திரம் பெற்றன, ஆனால் இதையும் மீறி, பாகிஸ்தான் அதன் யூம்-இ-ஆசாதியை ஒரு நாள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 14 அன்று […]

நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் இருந்து நகரம் நோக்கிச் செல்லும் வழியில், இயற்கை மலைகளால் சூழப்பட்ட ஓர் புனித தலம் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். இது, கொல்லிமலை, அலவாய்மலை, நைனாமலை மற்றும் போதமலை என நான்கு மலைகளுக்கிடையே தன்னிச்சையாக விளங்கும் தனித்துவமான அம்மன் சன்னதியாக விளங்குகிறது. பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் விழா காலங்களில் மட்டுமே ‘கம்பம்’ நடப்படும். ஆனால், இந்த கோவிலில் தினசரி இருந்து வருகிறது. தனது […]

சைவ உணவைப் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்து இறைச்சி உண்பவர்களை விட மிகக் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறைச்சி போன்ற உணவுகளை தவர்ப்பதன் மூலம், கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில், ஒரு அறிவியல் ஆய்வு ஆச்சரியமான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது, சைவ உணவைப் பின்பற்றுபவர்களுக்கு இறைச்சி சாப்பிடுபவர்களை விட புற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 80 […]

முன்னாள் அமைச்சராக இருந்தவர் தங்கமணி. 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தங்கமணி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழும் தங்கமணி, அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும், அவர் திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி, “நான் அதிமுகவில் அதிருப்தியில் இருப்பதாகவும், திமுகவில் இருந்து எனக்கு […]

தமிழகத்தில் இன்று முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் […]