உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட சூத்திரத்தைப் பின்பற்றாவிட்டால், எந்தவொரு பிராண்டாலும் ஒரு பொருளை ORS என்று அழைக்க முடியாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, உணவு வணிகங்கள் இந்த வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து கடுமையான விதிகளை அமைக்கிறது. தவறாக பெயரிடப்பட்ட ORS பிராண்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் குழந்தை மருத்துவரான டாக்டர் […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ஆர்த்தியின் தந்தை மற்றும் சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்த்தி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் கறக்கும் தொழில் செய்து வந்த ராமச்சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை ஆர்த்தியின் குடும்பத்தினர் […]

பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் […]

சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய அளவிலான வர்த்தக […]

உலக வேலைவாய்ப்பு சந்தை தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் யுகத்தால் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளைத் தீவிரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவாக, சந்தையில் புதிய திறன்களுக்கும், தொழில்முறை மறுவரையறைக்கும் தேவை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) வேலைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், […]

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை இந்தியா இன்று மீண்டும் ஒருமுறை ஆதரித்து, “நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் ” இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக […]