தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு தெரிவித்துள்ளது. அரை நாளில் திமுக அரசின் புளுகு அம்பலமானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், […]

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பத்தினரின் பெரிய லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. புதிதாக கார் வாங்க முடியாத பலர், பழைய கார்களை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை வெறும் ரூ.3 லட்சத்துக்குச் சட்டப்பூர்வமான முறையில் வாங்குவதற்கான ஒரு வழிமுறை குறித்து இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கார் வாங்கக் கடன் பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் […]

நித்திய கல்யாணி ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதனை பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி, சுடுகாட்டுப்பூ, கல்லறைப் பூ என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடு, மாடுகள் இதனை உட்கொள்வதில்லை. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நினைத்துப் […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் பணம் எடுப்பதற்கான விதிகளில் மிகப்பெரிய தளர்வுகளை அறிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முடிவெடுக்கும் CBT கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதும் (100% வரை) எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் மும்பையில் […]

மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது /துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று வரை பெற்றுக் கொள்ளமால் உள்ளனர். அத்தகைய […]

இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, எண்ணற்ற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தற்றவை என்றாலும், சில விலங்குகள் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், மரணத்தை விளைவிப்பவையாகவும் உள்ளன. மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உலகின் மிகவும் கொடிய 10 விலங்குகள் எவை என்று இங்கே பார்க்கலாம். யானை : உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் பொதுவாக மென்மையான விலங்கான யானை, தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது […]

கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்துகளை உட்கொண்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைக்கால்’ எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த ‘கோல்ட்ரிஃப்’ […]

நீண்ட நேரம் திரை பார்ப்பது கண்கள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது. தொடர்ந்து உட்கார்ந்து திரை பார்ப்பது குழந்தைகளின் உடல் செயல்பாடுகளைக் குறைக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் திரைகளைப் பார்த்துக்கொண்டே, படிப்பது, விளையாடுவது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது என பல மணிநேரங்களைச் செலவிடுகிறார்கள். இந்தப் பழக்கம் […]