கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் ஆனைமலைப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்திருக்கும் மாசாணியம்மன் திருக்கோயில், பக்தர்களுக்கு மன அமைதியையும், குறைகளுக்கான நீதியையும் வழங்கும் விசேஷ தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. சுற்றிலும் தென்னந்தோப்புகளும், மலைகளும் சூழ, இந்த கோயில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் கூடவே, ஆழ்ந்த ஆன்மீக சூழலையும் அளிக்கிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை தீர்க்கும் நம்பிக்கையுடன் இத்தலத்திற்கு வந்து அம்மனை மன்றாடுகின்றனர். இங்கு அருளும் […]
தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து மன்னர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அபுதாபி விமான நிலையத்தில் பிரமாண்டமாக நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது. தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கி வருகிறார். 1986 முதல் எஸ்வாட்டினி நாட்டை ஆண்டு வரும் 57 வயதான இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான […]
12-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக […]
கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு ஏன் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக […]
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது நீண்டகால காதலியான ராஷ்மிகா மந்தனாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சாலை விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார். தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வாலா மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி அருகே அவரது கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. புட்டபர்த்தியில் இருந்து ஹைதராபாத் நோக்கி விஜய் தனது லெக்ஸஸில் சென்று கொண்டிருந்தபோது, வலதுபுறம் திரும்பிய ஒரு பொலிரோ கார் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் […]
உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்காவுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், வெள்ளை மாளிகை கியேவுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினார். ஒவ்வொரு ஏவுகணையும் சுமார் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் […]
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]
உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதியான எவரெஸ்டில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மலையேற்றம் செய்வது வழக்கமாகும். நேபாளம் மற்றும் சீன எல்லையில் அமைந்துள்ளதால், இரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் மலையேற்றத்துக்கு வருவார்கள். சீனாவில் தேசிய தினம் உள்ளிட்டவற்றை கொண்டாடுவதற்காக தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 8 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் எவரெஸ்டின் திபெத் பிராந்தியத்தில் […]
The miraculous temple where water continuously drips on the Shivalingam.. 6000 years old..!! Do you know where it is..?

