தமிழகத்தில் அனைத்து வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின் […]

ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. மலிவான, வசதியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இந்த நிலையில் ரயில் டிக்கெட் விலையை இந்திய ரயில்வே சிறிதளவு […]

ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]

மாணவர்களின் உடல்நலன் கருதி ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பள்ளிகளில் ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை வழங்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாகப் பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு […]

ஜூலை 2025 இல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம். ஜூலை மாதம் பணம் தொடர்பான பல பெரிய மாற்றங்களுடன் தொடங்குகிறது.. இது சாதாரண மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கும். தட்கல் டிக்கெட் புக்கிங் முதல் வங்கிகளின் சேவை கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய விதிகள் வரை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்கள் சரியான […]

விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை […]

நம்மில் பலருக்கும், ஒரு நாள் முடிவடையும் விதம் அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கும்: இரவு 8 அல்லது 9 மணி அதற்கு பின் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்கச் செல்வது. ஆனால், இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ராவின் கூற்றுப்படி, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது அவசியம், அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ‘தூங்குவதற்கு குறைந்தது 3 மணி […]

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ரயில் எது தெரியுமா? இந்தியாவில் ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. ஏனெனில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கில் இந்திய ரயில்வே 4-வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.. பொதுவாக, இந்திய ரயில்வே என்றாலே மலிவான மற்றும் வசதியான பயணமாக கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் உள்ளது? அதில் பயணம் செய்வது ஒரு சொகுசு […]

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த 10 பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சனிக்கிழமை இரவு அஜித் குமார் […]

கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக தற்போது நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு வகைக்கு NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சில அசாதாரண அறிகுறிகளைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் விரைவான விகிதத்தில் பரவுகிறது. இந்த புதிய மாறுபாட்டின் பயங்கரமான அறிகுறிகள் இருந்தபோதிலும், WHO மற்றும் CDC போன்ற சுகாதார அமைப்புகள், பெரும்பாலான மக்களிடையே மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. […]