பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் தந்தை மகன் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அன்புமணி தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளார். கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை […]

அதிமுகவில் தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி அளித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. இதன் விளைவு… மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி. தந்தையும் – மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் […]

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள கோட்லி மாவட்டத்தின் நிகியால் பகுதியில் உள்ள டெட்டோட்டைச் சேர்ந்த முகமது யூசுப்பின் மகன் முகமது அரிப் அகமது ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் ஊடுவருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கம்பீர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் […]

நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளின் உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணங்களில், ‘பட்டா’ மற்றும் ‘சிட்டா’ ஆவணங்களுக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று பலரும் இந்த இரண்டு ஆவணங்களின் இடையே உள்ள வேறுபாடு, அவற்றின் நோக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதில்லை. நீங்கள் ஒரு நிலம், வீடு அல்லது மனை வாங்க விரும்பினால், சட்ட ரீதியாக உரிமையை நிரூபிக்க பட்டா மற்றும் சிட்டா ஆகியவை அடிப்படை ஆவணங்கள் ஆகின்றன. பட்டா என்றால் […]

இன்றைய காலத்தில் பலர் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கிறார்கள். குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைப்பது போன்ற காரணங்களால் அவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், அலுமினிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இந்தப் பாத்திரங்களுக்கு காலாவதி தேதி உள்ளது. இதுபோன்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய தரநிலைகள் […]

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் […]

NHAI செயலியைப் பயன்படுத்தி டோல் கட்டணத்தை எப்படி குறைப்பது என்று தெரியுமா? வாகன் ஓட்டிகளுக்கு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஜூலை 2025 முதல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) ராஜ்மார்க்யத்ரா மொபைல் செயலியில் ஒரு புதிய அம்சத்தை வாகன ஓட்டிகள் அணுகலாம். 2 இடங்களுக்கு இடையே குறைந்த கட்டணக் கட்டணங்களுடன் நெடுஞ்சாலைப் பாதையில் பயனர்களுக்கு இந்த செயலி வழிகாட்டும். இது தேசிய நெடுஞ்சாலைகள் பற்றிய விரிவான தகவல்களையும் வழங்குகிறது.. […]