தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பைக் என்பது வசதிக்குரிய போக்குவரத்து உபகரணமாக மட்டுமல்ல, ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், இந்த பைக்குகள் பாதுகாப்பற்ற பயணமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, […]

சமீப காலமாக, பலர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். சிலர் எடையைக் குறைக்க சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் இந்தப் பிரச்சினைக்கு எளிதான மற்றும் விரைவான தீர்வைத் தேடுகிறார்கள். அதற்காக கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், பவுடர்கள் மற்றும் ஊசிகள் ஏற்கனவே சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் ஊசிகள் (Weight-loss injections) அறிமுகமாகியுள்ளன. வெகோவி (Wegovy) மற்றும் மவுஞ்சாரோ (Mounjaro) எனும் இந்த மருந்துகள், உலகளவில் […]

பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள் அணிவதை தடை செய்தும், மாணவர்களின் வருகை பதிவேடில், அவர்களின் ஜாதி தொடர்பான விபரங்கள் இருக்கக்கூடாது  எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: * அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும், சமூக பிரச்னைகள், ஜாதி பாகுபாடு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள், ராகிங் குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து, பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வழங்க […]

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றில் ஐஐடி பம்பாய், ஐஐடி கரக்பூர், ஐஐடி ஹைதராபாத், ஐஐடி பாலக்காடு, ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் ரோஹ்தக், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி ஐஐஎம், ரேபரேலி எய்ம்ஸ், என்ஐடிகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் கொல்கத்தா, ஆர்ஜிஐபிடி பாசார் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன. […]

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை […]

டெல்லி ரெட்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ரக்பி பிரீமியர் லீக் பட்டத்தை வென்று சென்னை புல்ஸ் அணி வரலாறு படைத்துள்ளது. ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் பாணியில், இந்திய மண்ணில் இந்த ஆண்டு முதல் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) தொடங்கப்பட்டது. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் மும்பையின் அந்தேரி விளையாட்டு வளாகத்தில் ரக்பி பிரீமியர் லீக் தொடர் (ஆர்.பி.எல்) நடைபெற்று வந்த இந்த தொடரில், டெல்லி […]

ஜூலை மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்தில் மீண்டும் பள்ளி திறப்பு என்பது இரண்டாவது வாரம் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயில் குறைந்ததால் பள்ளிக்கல்வித்துறை ஜூன் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திறக்கப்படும் என தெரிவித்து, அன்றே திறந்து […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் […]

1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]