டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி மற்றும் செலவு மசோதாவின் சமீபத்திய செனட் வரைவை, உலக பணக்காரரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு, செலவினங்களை குறைப்பதற்காக […]

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், ஹோட்டல் தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் மேகவெடிப்பால், திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் மேல் தளம் சேதமடைந்ததில் ஒன்பது தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் . இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடந்துள்ளது, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செய்தி நிறுவனமான PTI படி, தெஹ்ஸில் பர்கோட்டில் உள்ள பாலிகாட்-சிலாய் […]

அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி. ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் […]

இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் கிரேட் 3 , டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்), ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு மூன்று பிரிவில் 6000 வேலை வாய்ப்புகள் உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவுக்கு 180 இடங்கள் உள்ளன. மொத்தம் 6180 இடங்கள் காலியிடங்களாக உள்ளன. வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் […]

சமீப காலமாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்டை சேர்ந்த சிலர் போதை மருந்து வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது கோலிவுட் திரை உலகிலும் போதைப் பொருள் பழக்கமும், போதை மருந்து பார்ட்டியும் அதிகரித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், தடை செய்யப்பட்ட கொக்கேன் […]

டிஜிட்டல் தளங்கள் மூலம் குற்றச் செயல்கள் எவ்வளவு அமைதியாகப் பரவுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ரூ.2000-க்காக தம்பதி, ஒரு தம்பதி தங்கள் தனிப்பட்ட உடலுறவுத் தருணங்களை லைவ் வீடியோவில் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் அனைத்தும் அவர்கள் வீடிலிருந்தே நடைபெற்று வந்தது. இன்றைய காலக்கட்டத்தில், சாதாரணமாகத் தெரியும் பலரும் – வேகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டிய ஆசையில், ஆபத்தான வழிகளில் பயணிக்கத் தொடங்குகிறார்கள். இந்த வழிகள் ஒருமுறை […]

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன. […]

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. […]

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 4-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சில இடங்களில் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் […]

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலைக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி […]