சாலை விபத்தில் காவல் அதிகாரி உயிரிழப்பு… தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

tamilnadu cm mk stalin

செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த அழகேசன் (வயது 47) என்பவர் கடந்த 19.11.2025 அன்று புதுச்சேரி – சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சீருடையில் காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தலைமைக் காவலர் அழகேசன் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.

தலைமைக் காவலர் அழகேசன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அழகேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கனமழை எதிரொலி... 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை...!

Mon Nov 24 , 2025
கனமழை எச்சரிக்கையால் 5 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று […]
rain school holiday

You May Like