எண்ணெய், சர்க்கரை, பருப்பு விலை எகிறியது! தலைவலியாக மாறிய விலைவாசி! கண்ணீர் விடும் குடும்பங்கள்!

Price 2026

இந்தியாவில் சில்லறை வர்த்தக பணவீக்கமானது கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு உணவுப் பொருட்களின் திடீர் விலையேற்றமே பிரதான காரணியாக அமைந்துள்ளது என்பது அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.


குறிப்பாக, சமையலறைக்கு தேவையான வெங்காயம், சர்க்கரை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு ஆகிய நான்கு முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த ஓராண்டில் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதில் வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக சுமார் 113 சதவீதம் வரை உயர்ந்து சாமானிய மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று சர்க்கரை விலை 22 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 18 சதவீதமும், துவரம்பருப்பு 14 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், அன்றாட உணவுக்குப் பயன்படும் சாதாரண ரக அரிசியின் விலையும் கூட 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

Read More : மத்திய அமைச்சராகிறார் நயினார் நாகேந்திரன்? எல்.முருகனுக்கு மீண்டும் பாஜக தலைவர் பதவி? அரசியலில் பரபரப்பு!

Next Post

வரலாற்றில் இல்லாத வானிலை மாற்றம்! குளிர்காலத்தில் வரப்போகும் பேராபத்து! பூமிக்கு காத்திருக்கும் புதிய பேரிடர்கள்!

Wed Oct 14 , 2026
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்பநிலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் வரலாறு காணாத வானிலை மாற்றங்களும் இயற்கை பேரிடர்களும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சர்வதேச வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுவாக பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது ‘எல் நினோ’ உருவாகும் சூழலில், நடப்பாண்டில் இந்த வெப்பநிலை உயர்வு 3.0 டிகிரி செல்சியஸ் வரை எகிறி ‘சூப்பர் எல் நினோ’ […]
Elnino 2026

You May Like