தவெகவில் இணைகிறார் செம்மலை!. MGR அலையையே வீழ்த்தியவர்… கூவத்தூரில் கெத்து காட்டியவர்!. அதிர்ச்சியில் இபிஎஸ்!

Semmalai tvk join 30kb

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செம்மலை, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி சலசலப்பு காரணமாக கடந்த மே மாதம் அவர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்த செம்மலை, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தவெகவில் இணைந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு விழுந்த மற்றுமொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


செம்மலையின் அரசியல் பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. கடந்த 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகமெங்கும் வீசிய எம்.ஜி.ஆர் அலையையும் மீறி, தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது அசாத்திய மக்கள் செல்வாக்கைக் கண்ட எம்.ஜி.ஆர், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த கூவத்தூர் ரிசார்ட் நிகழ்வின் போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு முதன்முதலாக வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தவர் செம்மலை ஆவார். எடப்பாடி பழனிசாமியுடனான தொடர் மனக்கசப்பு காரணமாக அதிமுகவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது தவெகவில் இணையவுள்ளது தமிழக அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

1newsnationuser5

Next Post

"அவர் ஒரு அசுரன்"!. டிரம்பையே வியக்க வைத்த தமிழ் மகன்!. கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு பாராட்டு!

Wed Sep 30 , 2026
அவர் ஒரு அசாத்திய திறமைசாலி (“மான்ஸ்டர்”) என கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விசித்திரமான முறையில் பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாஷிங்டனில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சுந்தர் பிச்சையைச் சுட்டிக்காட்டி, “இவரைப் பற்றி பலருக்கும் தெரியாது, ஆனால் இவர் ஒரு மான்ஸ்டர் (Monster). இவரைப் போல வாழ்வது […]
sundar Pichai Monster trump 30kb

You May Like