திருச்சியில் அதிர்ச்சி – திருமணமாகி 1 ஆண்டுகள் கழித்தும் வரதட்சனை கொடுமை!

திருச்சி மாவட்டம்  துறையூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திய வழக்கில் அப்பெண்  கொடுத்த புகாரை அடுத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர் விஜயநகர் பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார் வயது 35. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது காயத்ரிக்கு வரதட்சணையாக ரொக்கம், நகை.சீர்வரிசை என  எந்த குறையும் வைக்காமல் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் காயத்ரியின் பெற்றோர். திருமணம் முடிந்து ஓராண்டுகளான நிலையில் திடீரென சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்  மேலும் வரதட்சணை கேட்டு காயத்ரியை கொடுமைப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இதனால் கொடுமைக்கு ஆளான காயத்ரி துறையூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில்  தனக்கு ஓராண்டுகளுக்கு முன்பு சுரேஷ்குமார் என்பவருடன் பெற்றோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து வைத்தனர். அப்போது  மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டதன் படி  வரதட்சணை  முறையாக செய்ததாகவும் ஆனால் தற்போது தன்னிடம் ஐந்து லட்ச ரூபாய் மேலும் வரதட்சணையாக கேட்டு தனது கணவர் உட்பட கணவரின் குடும்பத்தார் கொடுமைப்படுத்துவதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார் காயத்ரி. இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை  இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  காயத்ரியின் கணவர் சுரேஷ்குமார் அவரது தாயார் மற்றும் தந்தை ஆகியோரிடம் வரதட்சணை கொடுமை தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Baskar

Next Post

14 வயது சிறுமியுடன் அடிக்கடி உல்லாசம்..!! திடீரென வந்த வயிற்று வலி..!! மருத்துவர் கொடுத்த ஷாக்..!!

Sun Feb 12 , 2023
14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன் (34) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் காதலித்து வந்த நிலையில், சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வாலிபர் […]

You May Like