fbpx

ரோஹித் கண்கலங்கும் வீடியோ வைரல்!!

இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நின்ற காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 அரையிறுதி போட்டியில் இந்தியாதோல்வியடைந்தது. அடிலெய்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. தோல்வியை தழுவியதால் ஒருவருக்கொருவர் ஆறுதல் படுத்திக் கொண்டு இடத்தை காலி செய்தனர். இந்நிலையில் அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ரோகித் ஷர்மா தனியாக அழுது கொண்டிருந்தார்.

https://twitter.com/SportyVishal/status/1590670773437763584?s=20&t=I8rFheyBq0zL2zFyaPKX-Q

அவரை சமாதானப் படுத்த ராகுல்டிராவிட் சென்றார் என்ன கூறியும் கேட்காத ஷர்மா கண்கலங்கி அழுதது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ’’இது குறித்து அவர் பேசுகையில் பேட்டிங் மிக சிறப்பாக செய்தோம் ஆனால் பவுலிங்கில் சொதப்பிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். தொடக்கமே ஏமாற்றமானது என தெரிவித்த அவர் வங்கதேசத்துடன் ஆடும்போது கூட இந்த மைதானத்தில் வேற லெவலில் ஆடினோம்.என்றார்.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் ஷர்மா 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுலும் மிகக் குறைவான ரன் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவை நம்பி இருந்த ரசிகர்களுக்கு அவர் எடுத்த ரன் ஏமாற்றத்தையே அளித்திருந்தது. எனினும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இந்தியா ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டது.

Next Post

தவறான பணப்பரிமாற்றம் நடந்ததா? கவலை வேண்டாம்.. இந்த எண்ணுக்கு அழையுங்கள்…

Thu Nov 10 , 2022
வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால் 24 மணி நேரத்திற்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் எளிதாக திரும்பப் பெற முடியும். சென்னையில் சைபர் குற்றங்கள் அதிகரித்த வரும் நிலையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் ஓ.டி.பி. பெற்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் பெருகி வருகின்றது. இது போன்ற மோசடியின் போது உடனடியாக எப்படி புகார் செய்வது என […]

You May Like