கருணாநிதியை விட மோசமான ஆட்சி ஸ்டாலின்…! பாஜக முன்னாள் மாநில தலைவர் அ.மலை கடும் விமர்சனம்…!

Annamalai Vs Stalin Updatenews360 1

கருணாநிதியை விட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து ‘ஏர்போர்ட்’ மூர்த்தியும் விசிக நிர்வாகி திலீபனும் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைது செய்யப்பட்டார். கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார். ஏர்போர்ட் மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல் துறை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

Vignesh

Next Post

பெரும் சோகம்!. டபுள் டக்கர் பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து!. 10 பேர் பலி; 61 பேர் காயம்!. மெக்சிகோவில் பயங்கரம்!

Tue Sep 9 , 2025
மெக்சிகோவில் இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 10 பேர் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மெக்சிகன் தலைநகரிலிருந்து வடமேற்கே சுமார் 80 மைல் (130 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள அட்லகோமுல்கோ நகரில் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரட்டை அடுக்கு பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. ஹெர்ரதுரா டி பிளாட்டா வழித்தடத்தில் இருந்து சென்ற பேருந்து இந்த […]
mexico double decker bus train accident

You May Like