தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா சென்னை நந்தனத்தில் இருக்கின்ற ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஸ்டாலின் இன்னும் பல பணிகளை செய்ய […]

திமுகவின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் சென்னை மெரினாவில் இருக்கின்ற அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தன்னுடைய தந்தையும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, முயற்சி, முயற்சி, முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. […]

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்வு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலர் பிரச்சாரம் செய்து வருவது வழக்கம். இந்த வகையில் சென்னையை சேர்ந்த ஜான் ரவி என்ற நபர் குஜராத்தில் தொழில் செய்து வருகின்றார் இவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டவரை அவதூறாக விமர்சனம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி […]

நாளை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முறமாக செய்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஒரு மாத காலமாக செய்து வந்தார்கள். அந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்வு பெற்றது. ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என்று இரு தரப்பும் பல அதிரடி பிரச்சாரங்களையும், சூறாவளி […]

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்று கடைசி நாள் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது நான் […]

முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருக்கின்ற பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 4ம் தேதி ஆய்வு நடத்துகிறார் […]

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுகவின் 21 மாத கால ஆட்சியை பொறுப்புக்கு மதிப்பெண் வழங்கும் தகுதி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக முயற்சித்து வருகிறது.அதேபோல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என நிரூபிப்பதற்கு […]

அரசியலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதும் சகஜமான விஷயம்தான். ஆனால் இருவரும் மாறி மாறி தங்களை விமர்சனம் செய்து கொள்வதில் எந்தவித பயனும் கிடையாது. யார் மீது யார் விமர்சனம் வைத்தாலும் தங்கள் மீது தவறு இருந்தால் அதனை நிச்சயமாக திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும், அப்போதுதான் அது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும். ஆனால் அந்த செயலை இதுவரையில் யாரும் செய்தது […]

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் ஃபயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக […]