fbpx

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டள்ளது.

rகடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை …

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் FIR கசிவுக்காக காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு காவல்துறை காரணமில்லை.. மத்திய அரசின் NIC நிர்வாக குறைபாடே காரணம் என தமிழக …

சென்னை அண்ணா நகரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ராஜி, அதிமுக வட்ட செயலாளர் சுதாகரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தனர்.

கடந்த ஆண்டு அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் …

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்து …

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 20 வருட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணையாக வகைப்படுத்துவதா அல்லது அழகு சாதனப் பொருட்களின் கீழ் வகைப்படுத்துவதா என்ற 20 ஆண்டு கால க வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு …

Supreme Court: நீதிபதிகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் மற்றும் ஆன்லைனில் தீர்ப்புகள் குறித்து தங்கள் கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்; அவர்கள் ஒரு துறவியை போல வாழவேண்டும்; குதிரையை போல வேலை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் அதிதி குமார் சர்மா, சரிதா சௌதரி ஆகிய இரு பெண் நீதிபதிகள் …

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ன் பிரிவு 14ன் கீழ் இந்துப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொத்துரிமை பற்றிய குழப்பத்தை உச்ச நீதிமன்றம் நிவர்த்தி செய்ய உள்ளது. மனைவிக்கு உயில் அளிக்கப்பட்ட சொத்தின் முழு உரிமை உரிமையையும் இந்த தீர்ப்பு தீர்க்க உள்ளது.

கடந்த ஆறு தசாப்தங்களில் 20 தீர்ப்புகளுக்கு வழிவகுத்த ஒரு பிரச்சினையில் சட்டரீதியான இழுபறியுடன் போராடி …

Supreme court: இன்னும் எத்தனை காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் பரவலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து …

சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத்தயாராக இருந்ததாகவும், ஆனால் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் பேசியிருந்தார்.இந்த பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக …

Court: கருசிதைவுக்குள்ளான பெண் நீதிபதி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில், ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்தியபிரதேசத்தில், 6 பெண் சிவில் நீதிபதிகளை மாநில அரசு பணிநீக்கம் செய்தது. அவர்களது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தது. பின்னர், இதை விசாரித்த மத்தியபிரதேச …