வாட்ஸ்அப்பின் செயல்பாட்டையும் பயன்படுத்துவதையும் தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. நாட்டில் உள்ள அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்றால், செய்தியிடல் செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, சமூக ஊடக தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் …
supreme court
சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்டவிதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை …
மதுக்கடைகள் மற்றும் பார்களில் வயது வரம்பு சரிபார்ப்பு கோரிய மனுவுக்கு பதிலளிக்கக் கோரி, அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்களில் சிறார்களின் பல வழக்குகளை மேற்கோள் காட்டி, மது விற்பனை செய்யும் நிறுவனங்களில் கட்டாய வயது சரிபார்ப்பு முறையை அமல்படுத்த உத்தரவிட்டது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக …
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில், சென்னை மாநகரக் காவல்துறையை, உச்ச நீதிமன்றம் கண்டித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு காவல்துறையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை …
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான வேதாந்தா ஆலையின் சட்டப்பூர்வ முயற்சிகள் முடிவடைந்துள்ளன. ஆலையைத் திறக்க உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கெதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு …
டெல்லியில் காற்று மாசுபாடு ஆண்டு முழுவதும் பிரச்சினையாக இருக்கும் போது, ஏன் நாடு முழுவதும் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்படவில்லை என்று டெல்லி அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுக்க நீடிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தையே தொடர்ந்து …
பொதுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பில், பணியிடங்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகளை செயல்முறையின் நடுவில் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது,
ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனத்தில் விதிமுறைகளை சிலருக்கு ஏற்ற வகையில் தளர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் …
பயிர்க் காடுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு இரண்டு மடங்கு அபராதம் விதித்துள்ளது . வெளியான தகவலின்படி, இரண்டு ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ரூ.5,000, இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 மற்றும் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.30,000 அபராதம் விதிக்கப்படும்.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் …
புகார்தாரரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சமரசம் செய்து கொண்டதால் பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை வழக்கில் இருந்து விடுவித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு …
இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், 7500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனங்களையும் ஓட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
LMV களை ஓட்டுவதற்கு உரிமம் பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவது தொடர்பான விபத்து வழக்குகளில் …