அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் வந்தவாசியில் பேசிய அவர், ஸ்டாலின் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் […]

தமிழகத்தின் மலைத்தொடர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு பரவலாக மழை, நிலச்சரிவு, மரங்கள் விழுதல் மற்றும் பிற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை […]

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் […]

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பைக் என்பது வசதிக்குரிய போக்குவரத்து உபகரணமாக மட்டுமல்ல, ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், இந்த பைக்குகள் பாதுகாப்பற்ற பயணமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, […]

தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் […]