கோவை பாப்பநாயக்கன்பாளைத்தில் சத்தியபாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சூட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இதனை அடுத்து கடந்த 13ஆம் தேதி கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற நபர் பட்ட பகுதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இத்தகைய நிலையில் ஒரு இளம் பெண் ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் instagram பக்கத்தில் புகைபிடித்தவாறும் கையில் பட்டாகத்தி அறிவால் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்றபடியும் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அத்துடன் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்த நபர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்த இளம் பெண் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே காவல்துறையினர் அந்த இளம் பெண் தொடர்பாக விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் அவர் கணுவாயில் தற்சமயம் வசித்து வரும் வினோதினி (23) என்ற தமன்னா என்பது ம் இவர் ஏற்கனவே கோயமுத்தூரில் கஞ்சா வழக்கு ஒன்றில் கடந்த 2021 ஆம் வருடம் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
இந்த சூழ்நிலையில், கோவை மாநகர காவல் துறையினர் வினோதினியின் மீது ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் அத்துடன் அவரை கைது செய்வதற்கு தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னால் அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதில் பேசிய அவர் தான் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற வீடியோ 2 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது அப்போது ட்ரெண்டிங்கிற்காக செய்யப்பட்டது தான் இந்த வீடியோ, தற்சமயம் நான் எந்த ஒரு வீடியோக்களையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், வினோதினி சேலம் மாவட்டம் சங்ககிரியில் பதங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு தனிப்படைக் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு சங்ககிரியில் வினோதினியை கைது செய்தனர். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.