திருப்பதி ஏழுமலையான் சிலையின் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள்..!! மலையில் ஒளிந்திருக்கும் அறிவியலை விஞ்சிய ஆன்மீக அதிசயங்கள்..!!

Thirupathi 2025

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி திருத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி திருமேனியைச் சுற்றி அறிவியலால் கூட விவரிக்க முடியாத பல்வேறு மர்மங்களும் ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ‘சிலாதோரணம்’ என்ற உலகிலேயே அரிதான, சுமார் 250 கோடி ஆண்டுகள் பழமையான பாறை அமைப்புகள் காணப்படுகின்றன. அதேபோல், பொதுவாகக் கருங்கற்களில் அரிப்பை ஏற்படுத்தி வெடிப்பை உண்டாக்கும் ரசாயனத் தன்மையுடைய பச்சை கற்பூரத்தை, வருடத்தில் 365 நாட்களும் ஏழுமலையான் திருவுருவச் சிலைக்குச் சார்த்தினாலும், அச்சிலையில் இதுவரை எந்தவொரு வெடிப்பும் கீறலும் ஏற்பட்டதில்லை என்பது மாபெரும் ஆன்மீக அதிசயமாகும்.


எந்தவொரு கருங்கல் சிலையாக இருந்தாலும் சிற்பியின் உளி பட்ட தடமோ அல்லது சொரசொரப்போ இருக்கும்; ஆனால், வெங்கடாஜலபதியின் திருமேனியில் உளி பட்ட தடமே இன்றி, மிகவும் மெருகேற்றப்பட்ட நேர்த்தியுடன் காணப்படுகிறது. தினசரி அதிகாலை நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தின் போது ஐரோப்பாவிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்படும் சிறப்பு ரோஜா மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அந்த நேரத்தில் சுவாமி தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதாக ஐதீகம் நிலவுகிறது. சுவாமியின் திருவுருவத்தில் எந்தவொரு ஆயுதமும் காணப்படாததால், தமிழ் இலக்கியங்களில் நமது முன்னோர்கள் இவரை ‘வெறுங்கை வேந்தன்’ எனப் போற்றியுள்ளனர்.

ஏழுமலையானுக்கு சொந்தமான ஆபரணங்களின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இதில் 12 கிலோ எடை கொண்ட சாலக்கிராம தங்கமாலையைச் சாத்துவதற்கு மட்டும் மூன்று அர்ச்சகர்கள் தேவைப்படுகின்றனர்; அவரது சூரியகடாரி மட்டும் 5 கிலோ எடையுள்ளது. பழங்கால மன்னர்கள் காணிக்கையாக வழங்கிய பொக்கிஷங்கள் மற்றும் 300 ஆண்டுகள் பழமையான சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை இத்திருக்கோயிலின் பெருமையை உலகளவில் பறைசாற்றுகின்றன.

Read More : புதிய தலைமைச் செயலகம் அமைய விடமாட்டோம்..!! மீனவ மக்கள் நம்பிக்கையோடு இருங்க..!! சீமான் பரபரப்பு அறிக்கை..!!

Next Post

சிவபெருமானின் 19 அவதாரங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? சிலிர்ப்பூட்டும் வரலாறுகள்..!!

Sun Sep 13 , 2026
சிவபெருமான், உலக உயிர்களை தீமைகளிலிருந்து காக்கவும், அறநெறியை நிலைநாட்டவும் எடுத்த 19 அவதாரங்கள் ஆன்மீகத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. சனியின் தோஷத்தை விலக்கத் தோன்றிய பிப்லாட், தன் வாகனமான நந்திகளின் காவலனாக திகழும் நந்தி அவதாரம், தட்சனின் யாகத்தை அழிக்கத் தன் சடாமுடியிலிருந்து உருவாக்கிய வீரபத்திரர் மற்றும் பிரம்மனின் அகந்தையை அடக்கத் தோன்றிய பைரவர் ஆகியவை ஈசனின் உக்கிர வடிவங்களாகப் போற்றப்படுகின்றன. அதேபோல், ஆலகால விஷத்தின் தாக்கத்தில் தோன்றிய […]
sivan koil

You May Like