உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.
இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, தொழில்நுட்ப வளங்கள், மற்றும் இயற்கை வளங்களின் அணுகல் ஆகியவை அடங்கும்.
இதன் மூலம், உலக நாடுகளின் உண்மையான ராணுவ சக்தி மற்றும் தயார்நிலை பற்றி தெளிவான படம் கிடைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. உலக அதி சக்திகளுக்கிடையே உயரும் பதற்றநிலையை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்கள் குறித்த தரவரிசையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்முறை மதிப்பீட்டில் அணு ஆயுத திறன்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் தங்களுக்கான இடத்தைப் பெற்றுள்ளன.
இங்கே சில முக்கிய விவரங்கள்:
அமெரிக்கா (United States) — உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவம் என 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு நிதி: $873 பில்லியன் (2024ம் ஆண்டு)
ரஷ்யா (Russia) — இரண்டாம் இடம்
மிகப்பெரிய அணு ஆயுதக் களஞ்சியத்தை கொண்டது. ஆனால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
சீனா (China) — மூன்றாம் இடம்
தென் கொரியா (South Korea) — 5-ம் இடம்
இங்கிலாந்து (United Kingdom) — 6-வது இடம்
பிரான்ஸ் (France) — 7-ம் இடம்
ஜப்பான் (Japan) — 8-ம் இடம்
துருக்கி (Turkey) — 9-ம் இடம்
இத்தாலி (Italy) — 10- இடம்
இந்திய ராணுவத்தின் தரவரிசை
உலகளவில் இந்தியா 4-வது மிக சக்திவாய்ந்த இராணுவம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உலகின் மிகப் பெரிய மனிதவள அடிப்படையிலான இராணுவங்களில் ஒன்றாகும். ராணுவ வயதுக்கு வரும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகை, கிடைக்கும் மனிதவளம், தொழிலாளர் படை, மற்றும் செயலில் உள்ள இராணுவத்தினர் + துணை இராணுவப்படைகள் ஆகியவற்றில் இந்தியா உலகில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்தியா தனது பரந்த மனிதவளத்தாலும், பரிமாணமான நிலப்படை வலிமையாலும், உலகின் முன்னணி இராணுவ சக்திகளில் ஒன்றாக திகழ்கிறது.



