நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் கொரோனா…! நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை….?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,038 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,994 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,89,989 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,30,45,350 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,604 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,99,47,34,994 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,92,969 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை… 3,413 பேர் இது வரை பாதிப்பு…! எல்லாம் உஷரா இருங்க… மத்திய அரசு போட்ட உத்தரவு…!

Vignesh

Next Post

’மக்களே கவனமா இருங்க’..! முதல்வரை தொடர்ந்து அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

Fri Jul 15 , 2022
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,10,809ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 17,858 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா மீண்டும் தீவிரமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி பொதுவாழ்க்கையில் […]

You May Like