ஒருவரின் அஜாக்கிரதையால் பறிபோன 4 உயிர்கள்.! மணப்பாறை அருகே கொடூர விபத்து.!

காரில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குடும்பமே பலியான சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த தங்கசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த , நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறையின் அருகே கார் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது.

அதனால் , சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரில் வந்த மற்றொரு காரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இரண்டு கார்களின் மீது, அவற்றின் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கசாமியின் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் உறவினர்களான ரஞ்சனா, பூஜா ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதையடுத்து மற்றொரு காரில் வந்த பத்மா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எதிர்பாரத இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

ஆதார் மோசடிகள்..!! ’மக்களே யாரும் இப்படி பண்ணாதீங்க’..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Thu Oct 27 , 2022
நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும். தற்போது அனைத்து சேவைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like