வீட்டில் நிம்மதியாக உறங்கிய பெண்; அத்துமீறி நுழைந்த நேபாள இளைஞரால் நேர்ந்த விபரீதம்…

d91f0a602b1cf696bc22aeb34e53578e

நாட்டில் மனிதநேயம் மெல்ல மெல்ல சிதைந்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களையும் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி, அதை வெளியில் கூறக்கூடாது என மிரட்டி, சில சம்பவங்களில் கொலை செய்யப்படும் குற்றங்களும் பதிவாகியுள்ளன.


இதையெல்லாம் விட, விலங்குகளையே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் கொடூர சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மனிதர்களிடம் இத்தகைய கொடூர மனப்போக்கும் வன்முறையும் அதிகரித்து வருவது, சமூகத்தின் பாதுகாப்பு குறித்தும், வருங்கால தலைமுறையின் நலன் குறித்தும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் வசித்து வந்தவர் கேஷப் குமார் போகடி. இவர் நேபாள நாட்டைச் சேர்ந்வர். இந்நிலையில், சம்பவத்தன்று போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளார். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். இதனால் போதை தலைக்கேறிய போகடி அருகில் இருந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும், அந்த வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு போகடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறிக் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சூளைமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தூங்கிய பெண்ணிற்கு நேர்ந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “அது எப்படிமா நீ கர்ப்பமான?” கணவனுக்கே ட்விஸ்ட் வைத்த மனைவி… இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

Saranya

Next Post

நீட் போராட்டத்தில் பரபரப்பு… சனம் ஷெட்டியின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

Sat Jul 25 , 2026
தமிழ் திரையுலகில் நடிகையாகவும், மாடலாகவும் அறியப்படும் சனம் ஷெட்டி, பல திரைப்படங்களில் நடித்ததுடன், சமூக விவகாரங்கள் தொடர்பான கருத்துகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும்போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக […]
sanam shettii

You May Like