திருமணமான 11 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை…..! அரியலூரில் சோகம்…..!

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு தற்கொலை என்பது ஒரு தீர்வாக இருக்கவே இருக்காது எந்த பிரச்சனையையும் நின்று நிதானமாக யோசித்து அதனை எதிர்கொண்டால் நிச்சயமாக அந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுபடலாம் பல காரியங்களில் வெற்றி அடையலாம் ஆனால் பிரச்சனைக்கு பயந்து கொண்டு தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் நல்லதல்ல.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகள் கற்பக லட்சுமி கற்பக லட்சுமிக்கு அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருடன் கடந்த 11 மதத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. இளவரசன் பெங்களூருவில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் கற்பக லட்சுமிக்கு சென்ற ஒன்றரை மாதத்திற்கு முன்னால் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.ஆகவே என்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கற்பக லட்சுமி தன்னுடைய தனிப்பட்ட அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலை கேட்ட கற்பக லட்சுமியின் மாமியார் சௌந்தர்யவல்லி படுக்கை அறைக்கு சென்று பார்த்திருக்கிறார்.

அங்கே அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அதாவது கற்பகலட்சுமி அந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கற்பகலட்சுமியின் மாமியார் சௌந்தர்ய வள்ளி கர்ப்பகாலட்சுமியின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து அழகிய மணவாளன் கிராமத்திற்கு வந்த பரமசிவம் தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், இது குறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

கல்விக் கடன் வாங்குவோரின் கவனத்திற்கு..!! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க..!! முழு விவரம் உள்ளே..!!

Wed Feb 15 , 2023
நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி மாணவர்களுக்குரிய கல்விக்கடனை பொறுத்தவரை அதிகபட்ச காலம் 15 வருடங்கள் பிணையமாகவும், ரூ.7.5 லட்சத்தில் NIL ஆகவும் இருக்கும். அதே நேரம் ரூ.7.5 லட்சம் வரையிலும் பாதுகாப்பு கடன் தேவையில்லை. […]

You May Like