பரபரப்பான வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற காரணங்களால் மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், அது சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கும் வழிவகுக்கலாம். அதுபோன்ற ஒரு சோகச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேடிப்பள்ளி பகுதியில், 25 வயதான தேஜஸ்வினி என்ற இளம்பெண் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த தேஜஸ்வினி, சில மாதங்களுக்கு முன்பு தனது வேலையை விட்டு, தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இரவு, தனது தாயின் அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தேஜஸ்வினி வீதிகளில் ஆடையின்றி ஓடிச் சென்றதும், பின்னர் அருகிலிருந்த கோவிலுக்குள் சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்ததும் பதிவாகியிருந்தது. அதன் பிறகு அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவில் குளத்தில் அவர் குதித்ததாகவும், மறுநாள் காலை அவரது உடல் குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தாய் கதவு திறக்கப்படாததால் உடைத்து வெளியே வந்தபோது, மகளை பல இடங்களில் தேடியதாகவும், பின்னர் கோவில் குளத்தில் அவரது உடல் இருப்பது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், தேஜஸ்வினி கடந்த சில காலமாக கடுமையான மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரவு நேரங்களில் பயங்கரமான கனவுகள், பீதி தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளாலும் அவர் அவதிப்பட்டு வந்ததாக அவரது தாய் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புக்கு மனநலப் பிரச்சனைகளே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: “மாமா, நீ ரேப் பண்ணு… நான் வீடியோ எடுக்குறேன்.” நண்பர்களை நம்பிய ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்..



