உயர்கிறதா மின் கட்டணம் & அரசுப் பேருந்துக் கட்டணம்…? அமைச்சர் சிவசங்கர் தந்த பதில்…!

siva Sankar 2025

தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அடிப்படையில்தான், மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்திலா் தெரிவிக்கப்படும். அப்போது, பொதுமக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துதான் வலியுறுத்தப்படும்.

ஏற்கெனவே இதுபோல பேருந்துக் கட்டண உயர்வு என்று தகவல் பரவியது. அப்போது, தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் நெருக்கடி இருந்தாலும், பொருளாதார சிக்கல் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையை பலமுறை உயர்த்தி இருந்தாலும், பேருந்துக் கட்டண உயர்வு இருக்காது என்று முதல்வர் மிகத் தெளிவாக அறிவித்திருந்தார். மீண்டும் அதையேதான் சொல்கிறோம். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என கடந்த 10 நாட்களுக்கு முன் தகவல் பரவிய போதும், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று முதல்வர் தெளிவுபடுத்தி இருந்தார். எனவே, தமிழகத்தில் நிச்சயம் அரசுப் பேருந்து கட்டண உயர்வு இருக்காது என கூறினார்.

Read More: “கமல் மன்னிப்பு கேட்க கூடாது”..!! “உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ”..? சீறி வந்த சீமான்..!!

Vignesh

Next Post

ராஜ்யசபா தேர்தல்..!! ஓபிஎஸை கழட்டிவிடும் இபிஎஸ்..!! பாஜக, பாமகவின் ஆதரவை பெறும் அதிமுக..!! இன்று MLA-க்கள் கூட்டம்..!!

Wed Jun 4 , 2025
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து, புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாள் மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில், திமுக 4 மற்றும் அதிமுக இரண்டு இடங்களை இந்த தேர்தலில் பெறும். தமிழ்நாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தொமுச சண்முகம், சந்திரதேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ளனர். […]
EPS OPS 2025

You May Like