மேடை வந்ததும் எழுந்த அந்த சத்தம்…! தொண்டர்களால் நெகிழ்ந்த அண்ணாமலை…!

Annamalai 2025

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை உச்சரித்த போதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.


மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமித்ஷா உட்பட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடும் போது நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக எழுந்து துண்டை சுழற்றியபடி விசில் அடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேடையில் அண்ணாமலை பேசிய போது தங்களது கையில் இருந்த துண்டுகளை சுழற்றி சத்தமிட்டனர். அமைதியாக இருக்கும்படி அண்ணாமலை கூறியதும் விசில் சப்தம் நின்றது.

Read More: மாறும் அரசியல் களம்…! நேரடியாக விமான நிலையம் சென்று அமித் ஷாவை வரவேற்ற அதிமுக தலைவர்கள்…!

Vignesh

Next Post

அரசமரத்தை இந்த 2 கிழமைகளில் மட்டும்தான் வழிபடவேண்டும்!. மற்ற நாட்களில் வழிபட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Mon Jun 9 , 2025
அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். […]
arasamaran worship 11zon

You May Like