fbpx

உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா எங்க மேலயே மோதுவ….? பிரியாணி வாங்குவதற்காக சென்ற இளைஞர் வெட்டி படுகொலை சென்னை அருகே பயங்கர சம்பவம்….!

சென்னை அருகே பிரியாணி வாங்குவதற்காக கடைக்கு சென்ற ஒரு இளைஞர் எதிரே வந்த நபர் மீது மோதியதால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மண்ணூர்பேட்டையில், மதுபான கடை அருகே இருக்கின்ற ஒரு பிரியாணி கடைக்கு கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாலா என்ற நபர் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்குவதற்காக அயனாவரத்தைச் சேர்ந்த நெப்போலியன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். இதில், நெப்போலியன் மீது, தெரியாமல் பாலா மோதியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட நெப்போலியனும், அவருடைய நண்பர்களும் மதுபோதையில் பாலாவுடன் சண்டை போட்டுள்ளனர். அதன் பிறகு, மது போதையில் இருந்த ஒரு நபர், பாலாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். மேலும், அவர்கள் மூன்று பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழில்பேட்டை காவல்துறையினர், பாலாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, காவல் துறையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

உனக்கு தினமும் இதே வேலையா போவுது சாவுடா…..! மிளகாய் பொடியை முகத்தில் தூவி கணவனை துடிக்கத்துடிக்க சரமாரியாக வெட்டி கொலை செய்த மனைவி….!

Tue Aug 22 , 2023
குடிபோதையில் நாள்தோறும் அட்டகாசம் செய்து வந்த கணவனை முகத்தில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பாலக்கொம்பை ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(37). இவருடைய மனைவி அழகு சின்னு (31) கூலி தொழிலாளர்களான இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து […]

You May Like