திருமணம் செய்து வைக்க தாமதம் செய்ததால், கடுப்பான இளைஞர், சொந்த தாய் என்று கூட பார்க்காமல், படுகொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தை அடுத்துள்ள பண்டா மைலாரம் கிராமத்தில், ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாய் தாமதம் செய்து வந்தார். இதனால், ஆத்திரம் கொண்ட மகன், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், செங்கல்லை கொண்டு, அவரை துடிக்கத், துடிக்க அடித்து கொலை செய்திருக்கிறார்.
அதன் பிறகு, காவல்துறையினரை குழப்புவதற்காக, கழுத்தை அறுத்து, கால்களை வெட்டி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து, மகள் வழங்கிய புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தாயை பெற்ற மகனே அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
ஆகவே, அவருடைய மகன், மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் ஒருவர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.