பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் தான், அருள்ராஜின் வீட்டிற்கு அவருடைய நண்பரான தங்கவேல் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, அருள்ராஜின் மனைவிக்கும், தங்கவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்து உள்ளது.
இதன் பிறகு, கள்ளக்காதலர்கள் இருவரும், அருள்ராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில், அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் அருள்ராஜ்க்கு தெரிய வந்துள்ளது. இதனால், இருவரையும் அருள்ராஜ் கண்டித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான், ஒரு நாள் நண்பர்களான அருள்ராஜ் மற்றும் தங்கவேல் உள்ளிட்ட இருவரும் வெல்டிங் கடையில் ஒன்றாக அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள். அப்போது இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து மீண்டும் தங்கவேல் மற்றும் அருள்ராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் கொண்ட தங்கவேல், அருள்ராஜை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
ஆத்திரத்தின் காரணமாக, நண்பனின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, பின்னர் பதற்றம் அடைந்த தங்கவேல், அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றார். மறுநாள் காலை, வழக்கம் போல, பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்தபோது அருள்ராஜ் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த அருள்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு இந்த கொலை சம்பவம் குறித்து, பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரித்து வந்த காவல் துறையினருக்கு, அருள்ராஜின் நண்பரான தங்கவேல் மீது, சந்தேகம் எழுந்தது. அந்த சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்கவேலுவை விசாரித்த போது, காவல்துறையினருக்கு பயந்து, அவர் தன்னுடைய நண்பனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேற்கொண்டு, காவல்துறையினர் நடத்திய கிடக்கு பிடி விசாரணையில், அருள்ராஜின் மனைவிக்கும், தனக்கும் இருந்த கள்ளத்தொடர்பு அருள்ராஜிக்கு, தெரிய வந்துவிட்டதால், அருள்ராஜை விட்டு வைத்தால், நம்முடைய கள்ளக்காதலை தொடர முடியாது என்று, அவரை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனடியாக, அவரை கைது செய்து, அவர் தங்கவேலுவை சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.