“சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் தான் மெஜாரிட்டி.. இதுவே மக்களின் தீர்ப்பு..!” – திமுக தலைவர் ஸ்டாலின் X பதிவு..

Stalin 2026

சட்டபேரவையில் எதிர்க்கட்சியினர் தான் பெரும்பான்மையாக உள்ளதாக, முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்.

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு! அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read more: அண்ணா முதல் விஜய் வரை: 7 முதலமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை..! யார் தெரியுமா..?

English Summary

“The opposition parties are the majority in the Assembly.. This is the verdict of the people..!” – DMK leader Stalin X post..

Next Post

இபிஎஸ் போட்ட பிச்சையில் வெற்றி.. சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணியை காட்டமாக விமர்சித்த அதிமுக..!

Tue May 12 , 2026
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. சட்டமன்ற தேர்தலை அடுத்து அதிமுகவில் நிழவும் குழப்பத்திற்கு விளக்கம் அளித்த சி.வி.சண்முகம், ” அதிமுகவின் தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அதிமுகவை […]
palaniswami edappadi k pti 1200x768 1

You May Like