“ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பிறகும் திருந்தவில்லை..!” – உதயநிதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

vanathi srinivasan 2025

சட்டமன்றத்தில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனம் ஒழிக்கபட வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த வானதி சீனிவாசன் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிறகும் உதயநிதி திருந்தவில்லை.. மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சனாதன தர்மம் அதாவது இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உதயநிதி ஸ்டாலினின், திமுகவின் கொள்கை என்றால், அதை திமுக தேர்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை? தேர்தல் பிரசாரத்தில் சனாதன தர்மத்தை இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை?

தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளில், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆட்சியின் இறுதி மூச்சு வரை இந்து தர்மத்தை பழிப்பதை திமுக வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான், கடைசி நாளில், “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என ஸ்டாலின் சொன்னதை மக்கள் நம்பவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் இனி திமுகவுக்கு கிடைக்காது என்ற பேசப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லை என்றால் திமுக என்பது ஜீரோ தான். அதனால்தான், “நாங்கள் எப்போதும் இந்து விரோதி தான்” என்பதை, எதிர்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி பேசியுள்ளார். தமிழக மக்கள் இந்த வேடதாரிகளை புரிந்து கொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனர். அப்படியும் இவர்கள் திருந்தவில்லை. அதனால் மக்கள் திருத்துவார்கள். அதற்கான காலம் விரைவில் வரும்.” எனக் கூறியுள்ளார்.

Read more: “இக்கட்டான சூழலில் கை கொடுத்தீர்கள்..” காதர் மொய்தீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த CM விஜய்..!

English Summary

“Even after being thrown out of power, he didn’t change..!” – Vanathi Srinivasan condemns Udhayanidhi’s speech..!

Next Post

கொழுப்பு கல்லீரல் நோயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீங்க; அதைத் தடுக்க இவை மிகவும் அவசியம்..!

Tue May 12 , 2026
பரபரப்பான வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவு இத்தகைய சூழ்நிலைகளில், கொழுப்பு கல்லீரல் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும்.. பலர் கொழுப்பு கல்லீரலின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காணத் தவறுகிறார்கள். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது இந்த நிலை ஏற்படுகிறது. ஆரம்பத்தில், இந்தப் பிரச்சனை சிறியதாகத் தோன்றலாம்.. ஆனால் உடனடியாகக் கவனிக்கப்படாவிட்டால், அதன் விளைவுகள் கல்லீரலுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. படிப்படியாக, கொழுப்பு கல்லீரல் உடலில் உள்ள பல முக்கிய செயல்முறைகளைப் பாதிக்கக்கூடும் […]
fatty liver

You May Like