கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் விஜயகுமார், லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த நிலையில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த விஜயக்குமார் அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.
Read more: அடுத்த தேர்தலில் இது நிச்சயம் நடக்கும்.. பொடி வைத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..! என்ன மேட்டர்..?



