“கொஞ்சம் கூட கூசலையா CM சார்..? படமா இருந்தா எமோஷன் சீன்.. நிஜத்துல ஜோசியர் பேச்சை கேட்டு..” கொந்தளித்த திமுக..!

cm vijay dmk it wing

நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த விஜய் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கர்நாடகா திரும்பினார்.. நேற்று மதியம் தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற அவர், பின்னர் சாலை வழியாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்றார்..


கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.. பின்னர் அம்மனை வழிபட்ட முதல்வர் விஜய் கோவிலுக்கு 1.5 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான வெள்ளி வாள் ஒன்றையும் அவர் காணிக்கையாக வழங்கினார்..

முன்னதாக கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முன்னாள் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சென்று வழிபட்டுள்ளனர்.. எம்.ஜி.ஆர். 2.5 அடி நீள தங்க வாளை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு காணிக்கையாக அளித்திருந்தார்..

இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் இந்த கோயில் தரிசனத்தை திமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.. தனது எக்ஸ் பக்கத்தில் “ அடுத்த பிறவியில் விவசாயக் குடும்பத்தில் பிறப்பது இருக்கட்டும், முதல்ல இப்ப அவங்க கேட்குற காவிரி தண்ணியைக் குடுங்க CM Saar! ​”தெய்வங்களுக்கே உணவளிப்பவர்கள் நம் விவசாயிகள்”னு வசனம் பேசுனீங்களே, அந்த விவசாயிகள் விளைவிக்கத் தண்ணி குடுக்காம, தெய்வத்துக்கிட்ட போயி வேண்டி என்ன பயன்னு உங்க மங்குனி மண்டைக்கு உறைச்சதா?

​”தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்”னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? ​இப்ப அதை மீட்டெடுக்காம ‘டெல்டா விவசாயிகள் காதுல டால்டா’ ஊத்திட்டு உங்க பாட்டுக்கு சாமி கும்பிடப் போறீங்களே, கொஞ்சம் கூட கூசலையா உங்களுக்கெல்லாம்? அதுசரி, 41 உயிருக்கே உங்கக்கிட்ட இருந்து இன்னும் பதில் இல்லையே!

​அன்னைக்கு, “எனக்கு விவசாயத்தைப் பற்றி ஆழமாகத் தெரியாது என்பது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்”னு பேசுனீங்களே, அதோட நிஜ அர்த்தம் இப்பதான் விவசாயிகளுக்கு உண்மையாவே புரிஞ்சிருக்கு! படமா இருந்தா ‘என்ன நடந்தாலும் விவசாயத்த கை விட்றாதீங்க’னு அவங்க எமோஷனை காசாக்க சீன் வைக்கிறது!

ஆனா நிஜத்துல, விவசாயி எக்கேடு கெட்டா நமக்கென்னனு, ஜோசியர் சொன்னதைக் கேட்டுக்கிட்டு நேரா கர்நாடகா கோவிலுக்கு வண்டிய விடுறது! ​பகுத்தறிவுப் பகலவன்கள் வாழ்ந்து சீர்திருத்திய தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்து சேர்ந்த மிகப்பெரிய சாபக்கேடு இந்த ‘இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி’!

​விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, கர்நாடகாவில் போய் சாமியாடும் இவரது கூத்துகளைப் பார்த்துவிட்டு, “தன்னை கொள்கைத் தலைவர் என்று சொல்லி கேவலப்படுத்துகிறானே” என மேலிருந்து தந்தை பெரியாரே கடுப்பாகி ​”Don’t make me come down there, you punk!” எனத் தன் கைத்தடியால் மண்டை மேலேயே போட்டிருப்பார்!” திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது..

Read More : ”தொடைநடுங்கி தலைவர்.. இந்த மண்ணாங்கட்டிக்கு ‘மார்டன் சோழன்’ பில்டப் ஒன்று தான் குறைச்சல்..” தவெகவை வெளுத்துவிட்ட திமுக..!

RUPA

Next Post

சோலார் மூலம் இலவச மின்சாரம்..! ரூ. 78,000 மானியம்..! அரசின் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..?

Sat Jun 13 , 2026
பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி நிலையங்களை (solar plants) நிறுவி வருகின்றனர். இது இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய குடியிருப்பு கூரை-சூரிய மின்சக்தி (rooftop solar) திட்டமாகும். இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி 13 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மார்ச் 2027-க்குள் ஒரு கோடி வீடுகளைச் […]
Modi Solar 2025

You May Like