பெற்ற தாய்க்கு செ*ஸ் டார்ச்சர்..! போதையில் அத்துமீறிய மகனுக்கு பாடம்..! 3 மாதங்களில் கழித்து வெளிவந்த உண்மை..!

Madurai 2026

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (50) என்பவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற தனது மகன் ராஜாவை (30) இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கணவரை இழந்த அய்யம்மாளின் மகன் ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில், அவரது தொடர் குடிப்பழக்கம் காரணமாக மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலைக்குச் செல்லாமல் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறு செய்து வந்த ராஜா, சுமார் 3 மாதங்களுக்கு முன்பு போதை தலைக்கேறிய நிலையில் தாய் அய்யம்மாளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதில் கடும் ஆத்திரமடைந்த அய்யம்மாள், மகனைக் கீழே தள்ளிவிட்டு வீட்டிலிருந்த இரும்புக் கம்பியால் தலை மற்றும் கைகளில் சரமாரியாகத் தாக்கியதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், கொலையை மறைக்கும் நோக்கில் வீட்டின் பின்புறம் செப்டிக் டேங்க் அமைப்பதற்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் உடலைப் போட்டுப் புதைத்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினரிடம் மகன் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி நாடகமாடி வந்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ராஜா கடந்த 3 மாதங்களாகத் தலைமறைவாக இருப்பது குறித்து சந்தேகமடைந்த கருப்பாயூரணி போலீசார், தாய் அய்யம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் மகனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அய்யம்மாளை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி..!! எந்த கட்சியும் அசைக்க முடியாதாம்..!! உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்..!!

Next Post

போதைப்பொருள் பழக்கத்தை தடுக்க.. இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன அந்த மெசேஜ்..!!

Thu Aug 27 , 2026
போதைப்பொருள் பழக்கத்தைத்தடுப்பதிலும், ஆரோக்கியமான வலிமையான சமூகத்தை கட்டமைப்பதிலும் விளையாட்டுகள் மிக முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர், நூற்றுக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தலைசிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டுமெனில், பல்வேறு வகையான விளையாட்டுகளிலும் நமது வீரர்கள் பரவலாக பங்கேற்க வேண்டும் என்றார். […]
modi 3

You May Like