தினமும் வேர்க்கடலை சாப்பிடுவீங்களா? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க! டாக்டர்கள் கொடுக்கும் வார்னிங்!

Peanut 2025

பசியை எளிதில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட வேர்க்கடலையை பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுவது வழக்கம். எனினும் வேர்க்கடலை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்க கூடாது என்றும், அப்படி குடித்தால் தொண்டை வலி, சளி மற்றும் இருமல் ஏற்படும் என்றும் பெரியவர்கள் எச்சரிப்பதுண்டு. வேர்க்கடலை உடலுக்கு வெப்பத்தை தரக்கூடிய உணவு என்பதால், அதனை சாப்பிட்ட உடன் குளிர்ந்த நீர் குடிப்பது உடலுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்ற பாரம்பரிய நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.


ஆனால் நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, வேர்க்கடலை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பதால் கடுமையான நோய்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படும் என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேர்க்கடலையில் இயற்கை எண்ணெய்களும் உலர் தன்மையும் அதிகம் இருப்பதால், சிலருக்கு சாப்பிட்ட உடன் தொண்டை வறட்சி அல்லது லேசான அரிப்பு உணர்வு ஏற்படலாம். அத்தகைய நேரங்களில் தண்ணீர் அருந்துவது உண்மையில் தொண்டைக்கு இதமளித்து நிவாரணம் தரும் என்பதால் தண்ணீர் குடிப்பது தவறல்ல.

அதேநேரம் சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்ட பின் உதடு அல்லது நாக்கு வீங்குவது, தீவிர இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவை தண்ணீர் குடிப்பதால் உருவாவது அல்ல; மாறாக வேர்க்கடலையால் ஏற்படும் அலர்ஜி (Peanut Allergy) காரணமாகவே இத்தகைய அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே சந்தேகப்படுபவர்கள் வேர்க்கடலை சாப்பிட்ட 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரை குடிப்பது நல்லது.

Read More : தங்கம், வெள்ளி விலை மேலும் உயருமா? இறக்குமதிக்கு ஜிஎஸ்டி விதித்த மத்திய அரசு! நகைப்பிரியர்கள் ஷாக்!

Next Post

ரியாத் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல்!. 12 பேர் உயிரிழப்பு; 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

Sun Oct 11 , 2026
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். யேமனில் சவுதி அரேபியாவின் தலைமையில் செயல்படும் கூட்டணிப் படைகள், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என குற்றம்சாட்டியுள்ளதுடன், இதற்கு […]
Riyadh airport attack

You May Like