fbpx

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் …

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனமனான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (tangedco) 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

1. எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395 பணியிடங்கள்
2. எலக்ட்ரானிக்ஸ் …

தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல நெசவாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர முதல் 100 யூனிட் மின்சாரம் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், …

மின்கம்பிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் புதிய மின் இணைப்புக்கான மேம்பாட்டு கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக மின்சார வாரியத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, புதிய மின்சார இணைப்புகளுக்கான மேம்பாட்டுக் கட்டண உயர்வினை மாற்றி அமைத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை போன்ற பெருநகரங்களில் பூமிக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மூலம் …

தமிழக மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழக மின் வாரியத் துறையில் டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிகளுக்கு 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ …

தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனுடன் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மின்கட்டணம் செலுத்தும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு மின்வாரியம் நவீனமயமாக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அடுத்தக்கட்டமாக அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக …

விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம், தற்போது மற்றொரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5, 2020ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெற வேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அத்துடன், ஆகஸ்ட் 5, …

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு இருந்து வருகிறது. இதற்கு வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2022இல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதில், முதல்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ஆகவும், …

நேரத்துக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது என்று என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின் பயன்பாடு அதிகம் உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 20% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2024 ஏப்ரல் முதல் தொழிற்சாலைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இந்த மின் …

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னை வந்திருந்தார். அப்போது, மின்சாரம் தடைபட்டது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அளித்த விளக்கத்தில், ”போரூர் துணை …