அடக்கடவுளே..! கணவர் போன் எடுக்காத விரக்தியில் விபரீத முடிவு எடுத்த இளம்பெண்.. கல்யாணம் ஆகி 3 மாசம் தான் ஆகுது..!

marriage death

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிஷா(19). மணிகண்டன் என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் குழித்துறையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மர வேலை செய்து வரும் நிஷாந்த் வேலை காரணமாக வெளியூர்க்கு சென்றுள்ளார். அப்போது நிஷா, கணவரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நிஷாந்த் வேலையில் இருந்ததாக போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


உடனே நிஷா, தனது தாய் உஷாவிடம் தெரிவிக்க அவரும் மருமகனின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கும் எதிர் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை என கூறப்படுகிறது. இதனை மன உளைச்சலுக்கு ஆளான நிஷா, தான் விரும்பி மணந்த காதலன் திருமணத்திற்கு பிறகு அக்கறை காட்டாமல், அலட்சியப் படுத்துகிறான் என்ற எண்ணத்தில் உயிரை மாய்க்க முடிவு செய்துள்ளார்.

வீட்டுக்குள் சென்று அங்குள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். மகள் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த தாய் உஷா உடனே வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த நிஷாவை பார்த்து கதறி அழுதார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த புது மணப்பெண் கணவன் செல்போனை எடுத்து பேசாத காரணத்திற்காக உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more: உஷார்.. சூரிய வெப்பத்தால் ஏற்படும் தோல் பாதிப்பு..! இந்த அறிகுறைகளை லேசா எடுத்துக்காதீங்க..!

English Summary

A young woman made a bizarre decision in frustration when her husband didn’t answer his phone.

Next Post

'70-80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள்..' பெண் அரசியல்வாதிகள் குறித்த கருத்தை தொடர்ந்து புதிய சர்ச்சையில் சிக்கிய MP..!

Wed Apr 22 , 2026
பீகார் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பாப்பு யாதவ், தனது பொதுவெளிக் கருத்துக்கள் காரணமாகத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவரது கருத்துக்கள் பல சமயங்களில் நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, பல சந்தர்ப்பங்களில் இவருக்குச் சட்டச் சிக்கல்களையும் உருவாக்கியுள்ளன. இம்முறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக இவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, பீகார் மாநில மகளிர் ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் பெற்றதைத் தொடர்ந்து யாதவ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் […]
paapu yadav mp

You May Like